எழுதியவர்- வளருங்கவி அமுதன்

கண்மணி நீ
வர காத்திருந்தேன்..
பொன்நிற மேனியை
தேனூறப் பார்த்திருந்தேன்..
வாசல் தோறும்
பூசணியாய் வைத்தவள்..
மாங்கனியே மல்லிகை
வீசிய வாடையில்..
என்மனம் நெருங்கிட
வந்தவள் வளர்பிறையே..
வானுலவிட நிறைந்தவள்
தோள்களில் மையலிடும்..
தொடுதலில் நித்தமும்
துணைவியாள் கரங்களால்..
மன முடிபோட்ட
மண பந்தம்..