தந்தவர் – அகரன் பூமிநேசன்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ஓவியம், சிற்பம், பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
நமது மண்ணிண் கலைவடிவங்கள் தொடங்கி உலக கலைவண்ணங்களை அறிமுகம் செய்யும் நூல்.
இப்புத்தகம் எந்த ஓவியத்தையும், சிற்பத்தையும் கண்டால் கலைகளை ஆராய, அனுபவிக்க கற்றுத்தரும்.
மேல் நாட்டாரும், அரசுகளும் வண்ணங்களை உயிராக நேசிக்கும் உண்மையையும், நீண்ட கலைவழக்குள்ள நம் தமிழ் பண்பாடு இன்று எல்லாவற்றில் இருந்தும் தொலைந்து போவதை காட்டுகிறார்.
ஒரு சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துவிட்டு நகரும் நாம் அதை ஆராய்ந்து அதுபற்றி கற்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது கட்டுரைகள்.
சோழர் பரம்பரையில் இருந்து சிற்பியாக இருக்கும் தலைமுறையயை சேர்ந்த, ‘’வித்தியாசாகர் ஸ்தபதி’’ கும்பகோணம் சுவாமிமலை செல்லும் சாலையில் எளிய வீட்டில் இருக்கிறார். அவர் இன்றும் உலகத்தரமான சிற்பங்களை படைக்கிறார்.
ஆனால், நம் மக்கள் உலகத்தரமான அந்த சிற்பியை கண்டுகொள்ளவில்லை.
மனம் வெடித்தளுகிறது. யார் நம் கலைகளை காப்பார் ? வரலாற்றை மீட்பார் ? அறிவொளி பரவாதோ ? என்று ஏங்குகிறது மனது.
சில மணிநேரங்களில் கற்கக்கூடிய சிறிய புத்தகம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று.