எழுதியவர் –
சசிகலா திருமால்கும்பகோணம்.

தும்பிப் பிடித்து நூலில் கட்டி
விளையாடிய நாட்களெல்லாம்
இன்று பப்ஜி விளையாடுவதில்
நிறைவடைவதில்லை..
காக்காய் கடிக்கடித்து
கமர்க்கட் சாப்பிட்ட
இனிமையான தருணங்களெல்லாம்
இன்றைய பீட்சாவில் பீஸ் பீஸாகி போகின்றது…
ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடிய நினைவுகளின் சுகம்
வானூர்தியில் வானளந்து பறந்தாலும் வருவதில்லை…
தீப்பெட்டியில் நூல் கட்டி
தொலைபேசியாய் பேசி மகிழ்ந்த
தருணங்களெல்லாம்
ஏனோ இன்று வீடியோ காலில் பேசிய போதிலும் இனித்துக் கிடக்கவில்லை…
இப்படி…
திட்டமிடா பால்யத்தில்
வட்டமிட்டு வாழ்ந்த சுகங்கள் ஏராளம்..
இவையனைத்தும்
படிக்கப்படா பக்கங்களாகவே
படிந்துக் கிடக்கின்றன ஆழ்மனதினில்..
மொத்தத்தில்…
நினைவில் அழியா காவியமாய்
நிரம்பி கிடக்கும்
ஏட்டில் எழுதப்படாத
மனதில் அழியாதக் குறிப்புகள் தான்
இந்த பால்யத்தின் நினைவுகள்..