எழுதியவர் – பழனியப்பன் சிவ ராமலிங்கம்

மண்ணுலகை காக்க வந்த..
வெண்ணிற தேவதைகள்..!
தொற்று நோய் காலத்திலும்..
தொய்வில்லாமல் மருத்துவ பணி..!
தன்னுயிரை துச்சமென..
தியாகத்தின் மறுயுருவாய்..!
பலகோடி மனிதரை காத்து..
பலரின் புண்ணியத்தை பெற்று..!
மண்ணில் வாழும்..
மனித தெய்வங்கள்..!
மானுடம் போற்றும்..
மகத்துவ செவிலியர்கள்..!