எழுதியவர்- குமரன்விஜி

நான் புதுமொழியை சுவாசிக்கும் புத்தகத்தில்
நீ கவிதை
நான் விரும்பும் கதையில்
நீ எதார்த்த நாயகி
நான் செல்லும் பயணத்தில்
நீ
முள் குத்தாத சாலை
நான் நீளும் தூரம்வரை
நீளும் உன் பூ மரங்கள்
எனது அன்றாட
அலுவல்களில் வரும் சண்டைபோலவும்
நீ
காலம் கடந்து நிற்குமா
நேசங்கள்
தெரியாது
சண்டைக்கு முன்னும்
பின்னும்
கொரோனாவுக்கு முன்னும்
பின்னும்
காற்றைப்போலவே
தேவையாய் இருக்கும் காதலும்.