எழுதியவர் – சசிகலா திருமால்

தேவதைகள்
வெள்ளை ஆடையில் தான்
வலம் வருவார்கள் என்று
யார் சொன்னது?..
அழுக்கு நிறத்திலும்
அழகாய் தெரியும் தேவதைகள் இதோ..
நிழலிலும் அழுக்கெடுத்து
தொற்றிடம் தோற்றுவிடாமல்
பாதுகாக்கும்
தெய்வ திருமகள்கள் இவர்கள்..
துப்புரவு செய்தே
தூய்மை இந்தியாவை
தூக்கி நிறுத்தியவர்கள்…
காற்றையும் வடிகட்டி
உலக உயிர்களைக் காத்திடும்
மனிதநேயமிக்க மகத்தான பணி இவர்களுக்கே உரித்தானது…
துப்புரவு செய்து
ஒப்புரவாய் உழைக்கும்
உன்னத மனிதர்கள்…
மிரட்டும் பிணிகளை துரத்தும்
இவர்களது கரங்கள்…
மனித மாண்புயர்ந்து
மகிழ்ந்துக் கொண்டாட வேண்டிய
மாமனிதர்களாய்…
துப்புரவாளர்கள்….