எழுதியவர் – தூரா.துளசிதாசன்

கிழித்துப் போட்ட
நாட்காட்டி தாள்களில்
கப்பல் செய்தாள்
சிறுமி ஒருத்தி …
கப்பலே கவிழ்ந்ததாய்
கன்னத்தில் கைவைத்து
காத்திருந்தாள்
பெண்ணொருத்தி…
அலைபேசியில் குறுந்தகவல்
கண் சிமிட்டியது
“கொரனா பரவலால்
இலையுதிர்க்காலம் இன்னும்
நீடிக்குமென்று…”
காணொளி அழைத்தலில்
தோன்றி மறைந்தது
கடல் தாண்டி
வலசை போன
கொண்டவனின் முகம்…
அலைக்கற்றை சுவாசம்
அலைபேசியில் குறைந்ததால்
உயிர்க்கற்றை ஊடுருவி
சென்றது ஒரு நிமிடம்
உடலைவிட்டு…!