எழுதியவர் – வளருங்கவி அமுதன்

உலகை வெல்லும்
பிடிவாத முனைப்பு..
சிகரம் ஏறிடவே
சீரான வேகம்..
கூரான பார்வையில்
குறிவைத்த இலக்கு..
மாற்றுத் திறனிருக்க
மருகாத மனோபாவம்..
மிருகமாக விடாது
மிரட்சியான பயிற்சியே..
இலகுவாகும் இமயமும்
உரங்களிட்டு உழைத்திடு..
வரங்கள் இங்கு
கிடைப்பது அரிதே..
நிறங்கள் பார்க்கும்
நீதிகளே உண்டு..
கண்டும் காணாது
காரியத்தில் நீயிறங்கு..
களம் முந்திட
பிந்திய கூட்டமிங்கு..