எழுதியவர் –வளருங்கவி அமுதன்

அமுதமாய் எனை
ஈன்ற அரிச்சுவடியே..
நான் தவழ இத்தரணி
இடர்களைச் சொல்லி..
எழுத்தாணி பிடிக்கத் தந்த
வெள்ளைக் காகிதத் தொட்டிலிலே..
மடியில் சீராட்டி வளர்த்து
நின் தேன் சொல்..
நாவினித்து அகம் நிறைத்து
வந்த உயிர் உருக்கி..
தொய்த்து நானெழுதும்..
இன்பமெல்லம் நீ
கொடுத்த தெள்ளுதமிழே..
தென்னகத்து கவிஞனாய்
கரையெற்றியது எனை
வாழ்க எம்தமிழே.