எழுதிய

ஒவ்வொரு சொல்லும்
ஒரு குழந்தை.
எண்ணங்களில் கருவாக இருந்ததுதான்
எழுதுகையில்
குழந்தையாகப் பிறக்கிறது…
மற்றொருவர்
அட்டைப் பிரித்துப் படிக்கையில்
அது பருவமடைகிறது.
சற்றே சிந்திக்கையில்
அங்கேயது மணம் புரிகிறது…
படித்ததைப் பிறரோடு
பேசுகையில் புதுப்புதுக் கருத்தாய்
பிரசவம் நடக்கிறது.
நாட்களைக் கொண்டுதான்
அது முதுமை கொள்கிறது.
வியப்பிங்கு என்னவென்றால்
ஒருபோதும்
புத்தகங்கள் மலடாவதில்லை…
இருக்குவரை சிந்தனையை
விதைத்தக்கொண்டே இருக்கிறது…
வாழ்நாள் முழுவதும்
அறிவைக் கையாளுகையில்
நீங்களும் புத்தகங்களாவே
இருந்துவிடுங்கள்…
கோடிக் கணக்கிலான
மக்கள் நிறைந்த ஒற்றை
நாடு என்பதைப் போல்தான்
கோடியெழுத்துக் குழந்தைகளால்
ஆனது ஒற்றைப் புத்தம்…
யாரும் இனி
படிப்பதை நிறுத்திவிட வேண்டாம்.
பிள்ளைகளின் வளர்ச்சி நின்றுவிடும்.
படித்துப் படித்து வளருங்கள்
அறிவையும் வாழ்வையும் மட்டுமல்ல
புத்தகங்களையும்தான்…