எழுதியவர் – சுயம்பு

செருப்பணிந்தும்
முள் குத்தியது
அவள் வார்த்தை
❤
சுட்டது வெயில்
ஓதுங்கினேன்
குத்தவில்லை
முள் மர நிழல்
❤
“மழை பிடிக்கும்”
எழுதிய கவிஞன் வீட்டில்
பிடிக்க பாத்திரமின்றி
வழிந்தோடியது
“மழை நீர்”
❤
ஈரமற்ற வறுமை
ஊதிக் கொண்டிருந்தாள்
பற்ற வில்லை
“ஈர விறகு”
❤
காதர் வீட்டு கல்யாணம்
விருந்தாகின
முருகன் வீட்டு ஆடுகள்
❤
சித்தாள் சேலையில் ஓட்டை
பார்வையால் அடைத்தார்
மேஸ்திரி
❤
பகலில் சிரிக்க
ராத்திரி ரணமானாள்
❤

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest


0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal