
தேவையான பொருட்கள்:
- அவல் – 1 கப்
- தேங்காய்த் துருவல் – 1/2 கப்
- நாட்டுச்சர்க்கரை – 1/4 கப்
- பேரீச்சை – 6
- ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை
- உலர் திராட்சை – 10
- செர்ரி பழம் – 5
செய்முறை :
- பேரிச்சையினை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- செர்ரி பழத்தினை நீளவாக்கில் நான்காக வெட்டி வைக்கவும்.
- அவலைத் தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, பின்னர் நீர் தெளித்து பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- ஊற வைத்த அவலுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச்சர்க்கரை, நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறிப் பின்னர் பரிமாறலாம்.