எழுதியவர் – கனகா பாலன்.

நூலின் பெயர் :- #இதோ_எழுகிறேன்
நூலாசிரியர் :-கவிஞர் #சுந்தரமூர்த்தி
பதிப்பகம் :-நண்பர்கள் பதிப்பகம்
பக்கங்கள்;-135
விலை:- ரூ 150
உள்ளத்துக் கற்பனைகளை ஊற்றுக் கேணியென அள்ளி அள்ளி வழங்குகிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர் பொ.சுந்தரமூர்த்தி அவர்கள்.
என்னைப் போலவே
எழுத்துக்களுக்குக்கூட இவரைக் கண்டால் கொண்டாட்டம் தான் போலும் தங்குதடையின்றி அவர் மனமேடையில் கொஞ்சி விளையாடி இருக்கின்றன.
அம்மா முதல் அகிலம் வரை யோசித்திருக்கிறார்.உறவு முதல் உள்ளக்குமுறல் வரை அலசியிருக்கிறார்.படித்துப் பெருமிதம் கொண்டேன்.
மூன்றாகப் பிரிந்தும் ஒற்றுமையாக பறக்கிறது தேசியக்கொடி
என்றே தேசியமும் எழுதியிருக்கிறார்.
*இருகரம் நீட்டி வணங்குவதைவிட
ஒருகரம் நீட்டி உதவிப்பார்
கண்மூன் நிற்பான் கடவுள்
“ஹலோ!ஏழையின் சிரிப்பில்”
நான்காவது வரியில் பகடியோடு பட்டென்று தலையில் கொட்டுவைத்து உரைக்கச் செய்துவிடுகிறார்.
“அண்ணன் சொன்ன கதை கேட்டு
ஆசையாய் பள்ளி சென்றேன்
சாதி கேட்டு மதம் கேட்டு
சமத்துவத்திற்கு சீருடை தந்து
பள்ளி தந்த முதற்பாடம்
புரியலையே இன்னும் எனக்கு …”
இந்தக் கவிதை புரிகிறது. அந்த முதற்பாடம் யாருக்குமே புரியாதுதான்.சமூகத்தின் மீதான சாடல் ஒரு குண்டூசிக் குத்தலாய் கவிதைகள் வழியாக வெளிப்படுத்துகிறார்.
*
சிறியதை குறிக்கும் வார்த்தையில் பெரிய ‘றி’ பெரியதை குறிக்கும் வார்த்தைகள் சிறிய ‘ரி’ என்னே…!
என் தமிழ் என் தன்னடக்கம் .
*
காகிதமை கண்டறிந்து காவியம் கொண்டவரிடையே ஒற்றை ஆணி
ஓலைச்சுவடி கொண்ட இரட்டைவரி போதும்..
என் தாய்மொழியின் வரலாறு சொல்ல …
**
கடவுளும் எனக்கு கடன்காரன் கொடுத்திருக்க வேண்டிய கொடுக்கவே இல்லை
ஜோடி மீன்களைப்
பிடித்து வளர்க்கிறாள்
கண் என்ற பெயரில்
கற்க கசடற கற்றபின் அதை
பாடமென்று பள்ளியில் விற்றல்
நமக்கு பகை .
இதுபோன்ற இவரின் கவிதைகளை வாசித்த நொடிகள் சிறுநேரத்திற்கு நம்மை உணர்வின் ஆழம் சென்று யோசிக்க வைக்கிறது.
மேலும்
*
100 ல் சென்றவன்
முதலாவதாகச் செல்கிறான்
108ல் .
**
ஆடம்பரத் திருமணம்
நிரம்பி வழிகிறது
குப்பையில் உணவு!
ஆசை ஏதுமில்லை
அழகாய் ஜொலிக்கிறது
தங்கத்தில் புத்தர்சிலை.
பந்தி முடிந்ததும்
பிரியாத உறவுகளுடன்
காகம்.
இவை மாதிரியான ஹைக்கூ சென்ட்ரியூக்களிலிலும் அசத்துகிறார்.
சமுதாய விழிப்புணர்வு கொண்ட ஹைக்கூக்களின் கருவாக பெண்ணியம், பெண் கல்வி,கழைக்கூத்தாடி, இன்னும் பல களமெடுத்து தன் கவிதையில் தனித்துவம் தருகிறார் என்று #முனைவர்மரமேஷ் அவர்களும்,
“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது “எனும் இந்த வரிகள் கவிஞர் சுந்தர மூர்த்திக்கு சாலப் பொருந்துமென ர்கவிஞர் #சுமதி_நரசிம்மன் அவர்களும் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள்.
உயிர்ப்பும்,உரமும் மிகுந்த வரிகள் வாசிப்போரைச் சுண்டியிழுக்கும் என்ற உத்தரவாதத்தோடு மரபுக்கவிஞர் #Shyamala rajesh அவர்களும்,
பலகோணங்களில் பலவிதமாகக் கவிதைகள் நெஞ்சை கொள்ளையடிக்கின்றன என்று கவிஞர் #சொ.சாந்தி அவர்களும் அணிந்துரை எழுதி சிறப்பித்துள்ளார்கள்.
*இதோ எழுகிறேன் “புத்தகத் தலைப்பே நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
உள்ளங்கை நிறைய அள்ளித்தரும் தனம்பிக்கைகளாக கவிஞரின் மொத்தக் கவிதைகளும் சிறப்பாக தொகுத்து
அமைத்த இந்த நூல் கவிஞரின் திறன் சொல்லும்.
நூல் தொடர்புக்கு
9094805958