
- ஆழமாகவும் அர்த்தத்துடனும் யாராவது ஒருவரிடம் “உங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறுங்கள். (உங்களிடமும்)
- உங்களால் புண்படுத்தப்பட்ட நபரிடம் என்னை “மன்னித்துவிடுங்கள்” என்று மனதார சொல்லுங்கள் (உங்களிடமும்)
- இன்று உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு “நன்றி” என்று சொல்லுங்கள்.
- உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அவர்களிடம் “தயவு செய்து “ என்று சொல்லி கேளுங்கள்…
- இப்பொழுதே நீங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்ட முக்கியமான மூன்று விசயங்களை எழுதுங்கள்.
- நீங்கள் இதுவரை செய்த மிகச்சிறந்த ஐந்து நல்ல விசயங்களை எண்ணி பாருங்கள்…
- கண்ணாடி முன் நின்று எல்லாம் வல்ல அந்த இறைவனின் அற்புதமான படைப்பான உங்களை அனுபவித்து பாருங்கள்..
- உங்கள் வாழ்வில் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் அதே இறைவனின் அற்புத படைப்பாக அனுபவித்து காணுங்கள்.
- நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஒரே காரணத்திற்காகவே இப்போதே கடவுளுக்கு நன்றி சொல்லி புன்னகை செய்யுங்கள் .. மகிழ்வாக இருக்க வேறெந்த காரணமுமே தேவையில்லை ..
என்ன ஒரு அற்புதமான உணர்வு.. எப்போதும் அனுபவியுங்கள் ..
உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்
இரகசியம் ஈர்ப்பு விதி