எழுதியவர் –Kamali Teps

காதல் மரணித்து விடுகிறது
உரிமை கோரும்
உறவுகளாகும் போது…
நல்லது கண்ணம்மா
நான் காதலித்துக் கொண்டே
இருந்து விடுகிறேன்…
இருப்பவைகளின் பாரங்களை விட
இல்லாதவைகள் மீதான ஏக்கம்
இணையற்ற சுகமானது…
நான் சுகமான
சுகத்துடன் இருந்து விடுகிறேன்.
உன்னை சந்திக்காமலே….
காதல் ஏற்றுக் கொள்ளப் படும்போது
முடமாகிப் போகிறது…..
சோக வரிகள் வறண்டு போகிறது….
எனது காதல்
ஆயிரம் கண்ணம்மாக்களுடன்
சிறகடித்துப் பறக்கட்டும்…!
எனது வரிகள்
கரைபுரண்டு பாயட்டும்…!
உன்னை பார்க்காமலேயே…..