எழுதியவர் – கவிதா முகுந்தன்.

இறக்கைகட்டிப் பறக்கும் நேரத்தை
இழக்க விருப்பமின்றி
மணிக்கூட்டை
எடுத்து மூடிவைக்கிறேன்
மர அலுமாரிக்குள்..
நேரம்பொன்னானது என
நேரமின்றி முணுமுணுத்தபடி
வைரவளையல்களை
வரிசையாய் துடைத்து
வகைபிரித்து
இரும்புப்பெட்டிக்குள்
அடுக்கிவைக்கிறாள்
என் அம்மா..
நேரம்போவதே தெரியவில்லை
என்று நேரத்தை
மீண்டும் மீண்டும் பார்க்கிறார் தொலைபேசியில்
தொடுவானம் தேடும்
என் தந்தை..
நேரத்திற்கும் தனக்கும்
என்ன சம்பந்தம் என்றே தெரியாமல்
இணையத்துள்
புதைந்து கிடக்கிறான்
என்தம்பி..
நேரமாகியும் உணவுவரவில்லை என்று
வாலைக்குழைத்தபடி
வாசலையே
பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒரு வாயற்ற ஜீவன்..
அப்போது…
நேரமோ…
வெகுநேரமாகி விட்டிருந்தது..!
தம்பலகமம் கவிதா.