எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்…

யாருன்னே தெரியாதவங்களுக்காக
எப்பவாச்சும் கண்கலங்கி அழுதிருக்கீங்களா?
முகம் தெரியாத மனிதருக்கும்
நாமும் உதவனும்னு நினைச்சிருக்கீங்களா?
அறிமுகம் இல்லாத போதும்
அவசரத்தேவை உள்ள ஒருத்தருக்கு
உதவி செஞ்சிருக்கீங்களா?
மனசாரச் சொல்றேன் நீங்களும்
போற்றப்பட வேண்டியவர்களே…
இதற்கான திருப்திங்கறது உங்க மனசுக்கு
மட்டும்தான் தெரியும்.
விலாவாரியாகச் சொன்னாக் கூட
கேட்கறவங்களுக்கு வெறும் செய்தி.
ரத்தமும் சதையுமா உணர்ந்தது நீங்க மட்டும்தான்.
நீங்க பெருசா எதும் செய்ய வேண்டியதில்லைங்க.
இந்த நற்சிந்தனையை அதிகப்படுத்திக்கிட்டா
மட்டும் போதும்.நெகட்டிவ் தாட்ஸ் வரும்போதெல்லாம்
உங்க மனச நேரான சிந்தனைகளின் பக்கம்
திருப்பிக்கிட்டாப் போதும்.
வாழ்றதுக்கு காசு பணம் எல்லாம் தேவைதாங்க.
இந்தக் காசு பணத்த வச்சு உங்க மனசு மாதிரி ஒரு மனச யாராலயும்
உருவாக்க முடியாது.
ஆரம்பத்தில இருந்து இப்ப வரைக்கும்
பணந்தான் பெருசுன்னு குறியா இருந்த
மனுசங்க எல்லாருமே தோத்துப்போன
ஒரே விசயம் உங்க மனச அவங்களுக்குள்ள
உருவாக்க முடியாமப் போனதுதான்…
இதுக்கு மேல என்னங்க வேணும்?
இந்த உலகத்துல உங்கள மாதிரி
மனசு உள்ளவங்கதான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.
மத்தவங்கள்லாம் உயிரோட மட்டும்தான்
இருக்காங்க.
உயிர்ப்பில்லாத மனச வச்சுக்கிட்டு
சத்தியமா நன்மைகளை உருவாக்க முடியாது.
வேணும்னா பேராசைங்கற துர்நாற்றம் பிடிச்சு
தீமைகளை அதிகமாக்க முடியும்.
நல்லதுதான் நினைக்கிறோம்.யாரும்
மதிக்க மாட்றாங்கனு வருத்தப்படாதீங்க.
நீங்கள்லாம் பஞ்சபூதங்கள் மாதிரி இருக்கனும்.
யாரு பாராட்டினாலும் திட்டினாலும்
உங்க கடமையில இருந்து தவறாதீங்க.
இந்த எடத்துல கடமைங்கறது சுமை இல்லீங்க.
உங்களுடை நல்ல சிந்தனைகளின் வடிவம்…
நல்லதையே சிந்திச்சுக்கிட்டு இருங்க.
நல்லா வருவீங்க…
…கா.ரஹ்மத்துல்லாஹ்…