எழுதியவர் – எம்.வஸீர். வாழைத்தோட்டம்

சென்ற நோன்பின் சூடு
சீறாய் ஆற வில்லை
வென்று கொள்க வென்று
வருது நோன்பு எம்மை!
இரக்க முள்ள நாயன்
இறக்கி வைக்கின் றானே
சிறக்க வேண்டும் மனிதன்
சிறப்பு நோன்பி னாலே!
ரமழான் மாதம் போல
ரம்ய மாதம் இல்லை
அமல்க ளுக்கு என்று
அதிக மதிக நன்மை!
குறைந்த ஆயுள் நமக்கு
காலம் கிடைத்து ருக்கு
நிறைய அமல்கள் செய்து
நிறைய நன்மை சேர்ப்போம்!
அதிர்ஷ்ட சாலி கட்கு
ஆயுள் தந்தான் அல்லாஹ்
இதிலும் அமல்கள் செய்து
இறைவன் அன்பை வெல்வோம்!
மனிதா நன்றி கெட்டு
மண்ணாய் போய்வி டாதே
இனிஇம் மாதம் போல
இல்லை வேறு மாதம்!
அடுத்த வருடம் மீண்டும்
அருமை ரமழான் வருமே
தடுத்து பிடிக்க உயிரை
தகுதி யார்க்கும் இருக்கோ?
எனவே இந்த வாய்ப்பை
எவரும் தவறி டாது
மனதில் உறுதி கொண்டு
மாண்பு நோன்பை ஏற்போம்!