1. ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ண பட்சம்) சதுர்த்தியில் அமைவது நரக சதுர்த்திப் பண்டிகை, இதனைத் தீபாவளிப் பண்டிகை எனச் சொல்கின்றனர்.
  2. வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இத்தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  3. வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர். முதல் நாள் பண்டிகையை சோட்டா தீபாவளி (சிலு தீபாவளி) என்பர். இரண்டாம் நாள் பண்டிகையை ‘படா தீபாவளி’ (பெரிய தீபாவளி) என்பர். மூன்றாவது நாளன்று ‘கோவர்த்தன பூசை’ செய்து கண்ணப்பிரானையும் வழிபடுவர். அன்றுதான், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.
  4. தீபாவளித் தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். மிகவும் புண்ணியம் உண்டாகும். அன்றைய நாளில் எண்ணெய்யில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் மூழ்கிக் குளித்தப் புனிதப் பயன் கிடைக்கும்.
  5. வடநாட்டில் தீபாவளித் தினத்தன்று செல்வத் திருமகளான லட்சுமிதேவியைப் பூஜித்து, புதுக்கணக்குத் தொடங்குவர்.
  6. தீபாவளித் தினத்தன்று வழக்கமாகக் குடும்பத்தில் வழிபடும் தெய்வத்தின் முன்பு கோலமிடுவர். தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணிகள், பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய், சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம் பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைப்பர். பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர்.
  7. புதிதாக மணமுடித்தவருக்கு அமையும் தீபாவளி தலைத் தீபாவளி. மாப்பிள்ளையையும் மகளையும் கோலமிட்ட மனையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குதல் வேண்டும். அடுத்து அவர்கள் பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக்கொள்ள வேண்டும்.
  8. தீபாவளியின் போது பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவது அவசியமாகும். சாஸ்திரத்திற்காகப் பட்டாசு கொளுத்த வேண்டும்.
  9. தீபாவளிச் சமையலில் சாம்பார், புளிக்குழம்பு போன்றவை இடம் பெறக்கூடாது. ஏனென்றால், தீபாவளிப் பண்டிகை யின் போது மழைக்காலமாகையால் அப்போது , அவை செரிமானம் ஆகாது. இப்பருவத்திற்கேற்ற, உடலுக்கு இதமான, பக்குவமான உணவு மோர்க்குழம்பு மட்டுமே. எனவே, தீபாவளிப் பண்டிகைச் சமையலில் மற்ற உணவுகளுடன் மோர்க்குழம்பு முக்கியப் பங்கைப் பெறும்.
  10. இந்துக்கள் மட்டுமின்றி ஜைனர், பெளத்தர், சீக்கியர் ஆகியோரும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
  11. லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் ‘செல்வம் வளரும்’ என்பது நம்பிக்கை.
  12. கண்ணபிரானுக்கும், நரகாசுரனுக்கு நடந்த யுத்தத்தில் கண்ணபிரான் தேர்த்தட்டில் மயக்கமுற்றார். சாரதியாக வந்த சத்தியபாமா வீரத்துடன் போராடினாள். அதனால் இப்பண்டிகை வீரலட்சுமியைப் போற்றி வணங்கும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
  13. தீபாவளிப் பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மைந்தன் பகதத்தன்.
  14. தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal