
இலங்கையில் காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் முதலாம் திகதியுடன் காலாவதியாகியுள்ள சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கும் செயற்பாடுகள் தடைபட்டிருந்தன.
இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டிருந்தது.