
ஸ்ரீராமரின் அவதாரத்திற்கு சேவை செய்வதற்கென்றே பரமசிவனால் அஞ்சனையின் மைந்தராக மார்கழிமாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தவா் ஹனுமான். இவரது குரு சூரியன். இவரிடம் இலக்கணம் படித்து சர்வ வியாகரன பண்டிதா் எனும் பட்டம் பெற்றவா். ராமரின் சேவைக்காக தன் உடம்மை புண்ணாக்கி கொண்டவா் ஹனுமான். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் தடவுவதுண்டு. அதனாலேயே ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. விநாயகரும் ஹனுமானும் இணைந்த வடிவத்தை ”ஆத்யந்த பிரபு” என்பார்கள். ஒருபுறம், விநாயகரின் தும்பிக்கையும் மறுபுறம், வானர முகமும் கொண்டதே இந்த வடிவம். இருவரும் பிரமச்சாரிகள் என்பதால் பிரமச்சாரியம் மேற்கொள்வோர் இவ்வடிவத்தை இஷ்டதெய்வமாக வணங்குவா். ஹனுமான் சிவனின் அம்சம். விநாயகா் சக்தியின் அம்சம். உலக நன்மைக்காக அனைவராலும் கேலி செய்யப்படும் குரங்கின் முகவடிவத்தை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டவா் ஹனுமான்.