
துவக்கம் நீ
முடிவு நான்! …..
எல்லாம் நீ
எண்ணம் நான்! …..
ஓவியம் நீ
தூரிகை நான்! …..
வண்ணம் நீ
வடிவம் நான்! ……
மொழி நீ
எழுத்து நான்! …..
கவிதை நீ
கவிஞன் நான்! …..
நான் நீயாகி
நீ நானாகியபின்! …..
இன்னும் ஏன்
தயக்கம் கொள்கிறாய்! ……
வழியினில் தோன்றி
நொடியில் மறையும்! …..
உன்னை விழியின்
தேடுதல் விடுவதாயில்லை! …..
மு.நஜிர் அகமது