
கண்ணிமைக்கும் நொடியில்
கடந்து போகும் இருட்டில்
எதையும் நினைப்பதில்லை!
அவ் இருட்டென நினைத்து
வாழும் வாழ்வின்
இருண்ட பக்கங்களை கடந்து செல்ல
பழகிக் கொள்ளுங்கள்!
இருளின் முடிவில் வெளிச்சம் பரவும்!
கரிய வாழ்வின் முடிவில்
பெரிய வாழ்வு உம்மைச் சேரும்!
பொலிகையூர் வசந்தன்