
மெளனமாய் இதயம்
கனத்தாலும் சலனப்படவில்லை
அனுபவத்தின் மூப்பால்..
என்னை நெருங்கி வந்த
மரணம் பக்கத்திலிருக்கட்டும்
அதற்குள் கொஞ்சம் பிரியம் செய்..
வாழ்ந்த நாட்களை
ஒரு படமாய் அல்லது பாடமாய்…
மனதுக்குள் பாராயணம்
செய்வோம்..
உன் கைகளைக் கொஞ்சம்
பற்றிக் கொள்கிறேன்..
உடலை உயிர் பிரிகையல்
உன் கைகளில்
என் உயிரின் கதகதப்பை
கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுப்
போகவே விரும்புகிறேன்..
உன்னிடமிருந்து தான்
என் விடைபெறல்
நிகழ வேண்டும்
அருகிரு…
இப்போது,
என்னை வழியனுப்பி வை
அருகிலிருக்கும் என் மரணத்திடம்
உன் நேசங்களோடு…
சங்கரி சிவகணேசன்