
முதன்முறையாக, இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான மற்றும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது பத்தரமுல்லை, தியனஉயன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ‘m stop’ எனப்படும் இந்த பேருந்து நிலையம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் தீர்மானத்திற்கமைய முதல் முதலாக நிர்மாணிக்கப்பட்டு நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.