
இன்று காலையில் மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் பிரயாணம் செய்த முதியவர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில் இருந்து அதிகாலை 5.30 மணியளவில் புறப்பட்ட பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவச் சோதனைக்காக பேருந்து, நிறுத்தப்பட்ட வேளையிலேயே முதியவர் மரணித்த விடயம் தெரியவந்துள்ளதனால் உடனடியாக சடலம் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.