
ஒரு கவிஞனின் காதலில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல
காக்கை குருவியென
செடி கொடியென
மேகம் ராகமென
நிஜம் நிழலென
இவள் அவளென
இடம் பொருளென
அனைத்தும் காதலோடு போட்டியிட
இவையெல்லாம் வென்று தின்று விழுங்கி
அவன் நினைவில்
நீங்காது நின்று
நித்தம் நிறைந்து
அவனது
மனதின் இனியவளாகி
ரசனைகளின் ருசியாகி
சிந்தனைகளின் சிற்பமாகி
கவிதைகளின் பொருளாகி
வேறு பெயறேற்று
உவமை உருவகமேற்று
கவி வரிகளில்
சிறப்பாய் வாழ்ந்து
காலத்திற்கும் நிலைத்து
முக்தி அடைகிறாள்
இவள்
செல்லம்மா
கோதை