

ஒருமுறை புத்தரிடம் கேட்டார்களாம், நீங்கள் தியானம் செய்து என்னவெல்லாம் பெற்றுள்ளீர்கள் என்று.
அதற்கு அவர் சொன்ன பதில், எதையும் பெறவில்லை, நிறைய இழந்திருக்கிறேன் என்பதாம்.
இழந்திருக்கின்றீர்களா? என ஆச்சரியமாய் கேட்டவர்களிடம்,
ஆமாம்…கோபம், அகங்காரம், பொறாமை, கேலி ஆணவம் இவற்றையெல்லாம் இழந்திருக்கிறேன் என்றாராம்.
கேட்டவர்கள் தெளிவாய் பார்த்தனராம்.