
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர் யுவதிகளின் தற்கொலை என்பது வடபகுதியில் அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது. இளைய சமுதாயத்தினரின் இத்தகைய முடிவுகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திவருகின்றது. வாழ்வைப்பற்றிய சரியான புரிதல் இன்மையே இத்தகைய முடிவுகளுக்கான காரணமாகிறது. யாழில் அதிகரிக்கும் வன்முறைகளும் குடும்ப சண்டைகளுமே இவ்வாறான முடிவுகளுக்கு முக்கிய காரணமாகும்.