
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்த தொழில்முனைவோரின் கடன்களை கையகப்படுத்த முடியாத நிலையில் வங்கிக்கடனுக்காக அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்த அவர், வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்றும் , இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.