
ஜெருசலேமில் உள்ள தனது தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதும், செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொசோவோ-செர்பியா உச்சிமாநாட்டின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.