
கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 30 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த பால சூரிய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.