
மகா சிவராத்திரி ஆன இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட பலனை பெற்றுவிடலாம் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இன்று சனி பிரதோஷத்தோடு சேர்ந்து வரக்கூடிய மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரியை முடிந்தவரை யாரும் தவற விடாதீர்கள்.
சிவராத்திரி என்றாலே சிவனுக்கு உரியது. சிவனுக்கு உரியதான வில்வ இலையை வாங்கி உங்கள் கையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும்.
கருங்காலி மாலை, ருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை இந்த மூன்று மாலைகளுமே இறை அம்சம் பொருந்தியது.
ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலியால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும்.