மேஷம்
எதிர் நீச்சல் போட வேண்டிய நாள். குடும்பத்தில் நிம்மதி குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.

ரிஷபம்
அனைத்து விஷயங்களிலும் மனத்திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும்.

மிதுனம்
அரசுப் பணியாளர்கள் இடமாற்றங்களை எதிர் பார்க்கலாம். பணிச்சுமையும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களால் உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.

கன்னி
பக்தி மார்க்க சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.

மகரம்
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. அனைவருடனும் சுமுகமாகப் பழகி, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் ஏளனமே மிஞ்சும்.

கடகம்
எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும்.

சிம்மம்
வேலை தேடுபவர்களுக்கு நேர்காணல்களில் வெற்றி கிடைக்கும். கீழே பணிபுரிபவர்களுக்கு கட்டளையிடும் உயர் பதவி கிடைக்கும். அரசு ஆதரவு இருக்கும்.

துலாம்
எதிலும் அலட்சியமாக இருக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் பதவி உயர்வு உண்டு.

மீனம்
தனலாபம் பெருகும். அனைத்து காரியங்களிலும் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். தடைப்பட்டு வந்த தொழில் வளர்ச்சி நிலையை அடையும்.

தனுசு
எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் உற்ற தோழர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.

விருச்சிகம்
புதியன கற்பதில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்க திட்டமிடுவீர்கள். சுவையான உணவுகளை ருசித்து மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

கும்பம்
தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகளால் படுத்தவுடன் தூக்கம் வராது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal