Month: October 2022

யாழில் அமோக விற்பனையில் பொன்னியின் செல்வன்!!

யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. 5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும்…

இலங்கையில் நான்கு படிச் செயற் திட்டம் அறிமுகம்!!

இலங்கையில் தற்போது மக்களின் போசாக்கு நிலை மந்த கதியில் உள்ள நிலையில் போசாக்கு தொடர்பான விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய போஷாக்கு மாதத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாண செயலாளர்கள்,…

பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!!

இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மதுபானத்தைக் கண்டறிய புதிய செயலி!!

மதுவரித்திணைக்களம், சட்டவிரோத மதுபானத்தை தொழிநுட்ப சாதனங்கள் மூலம் கண்டறியும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கரின் கியூ.ஆர் குறியீட்டை தொலைப்பேசி மூலம் அறிவதன் மூலம் அதனுடன் தொடர்புடைய தகவல்களைப் பெற…

அரச பணியாளர்களுக்கு அரை மாத வேதனம் என்பது தவறான செய்தி!!

சமூக ஊடகங்களில், ‘அரச பணியாளர்களுக்கு அரை மாத வேதனமே வழங்கப்படும்’ என்று  வெளியான செய்தியை நிதியமைச்சு மறுத்துள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

பெற்றோல் விலை குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் 92 இன் விலை லீற்றருக்கு 40 ரூபாவும், பெற்றோல் 95 இன் விலை லீற்றருக்கு 30 ரூபாவும் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 92 ரக பெற்றோலின்…

வல்வெட்டித்துறையில் தீயில் எரிந்து கணவன், மனைவி உயிரிழப்பு!!

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது…

இன்று முதல் புதிய வரி!!

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும்…

சிறுவர் மற்றும் முதியோர் தினம்!!

ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதியோர் நாளாக கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு உலக அரங்கில் முதல் முறையாக ‘முதியோர் நலன்’ குறித்து பேசப்பட்டது. அதை ஏற்றுகொண்ட ஐ.நா. அவை முதியோர் நலனை வலியுறுத்தும் விதமாக, 14 ,…

முன்னோடிப் பரீட்சையைப் பிற்போடத் தீர்மானம்!!

எதிர்வரும் ஐந்தாம் திகதி மத்திய மாகாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சையை பிற்போடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அன்றைய தினம், பாடசாலைகளில் நவராத்திரி பூசை இடம்பெறவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி,…

SCSDO's eHEALTH

Let's Heal