
இலங்கையில் வைகாசி மாதத்தில் இதுவரை 37,056 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 2021 மே முதலாம் திகதி முதல் 2021 மே 18 ஆம் திகதி காலை 06 மணி வரை 7,819 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதே காலகட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் 6,230 கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு களுத்துறையில் 4,872 பேரும் காலியில் 2,585 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 1,821 பேரும் கண்டியில் 1,671 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.