எழுதியவர் – குமரன்விஜி

கால வியர்வையே உன்னை
கை கூப்பி வணங்குகிறேன்
காடு செதுக்கி
நாடு செதுக்கி
கடவுள் செதுக்கவும் நீயே துணை
பொய்யாய் இருந்ததில்லை
மாயமென்று உன் பெயருமில்லை
நீதான் இங்கு விடியல்
நீதான் இங்கு பேரன்பு
நீதான் எனக்கு காதல்
நீதான் எனக்கு கம்பீரம்
நீதான் எனக்கு கருணை
நீதான் எனக்கு தோழன்
நீதான் எனக்கு கவிதை
நீதான் எனக்கு சுற்றம்
உன் துளியில் வளர்ந்தது வயல்கள்
உன் துளியில் எழுந்தன கோட்டைகள்
உன் துளியில் நிமிர்ந்தது கோபுரங்கள்
உன் ஒரு துளியென்ன
உன் ஒவ்வொரு துளியிலும் வசந்தம்
நீயே என் கடவுள்
உன்னை அறிந்தேன்
போலிகளை நான் துறந்தேன்
பூமி பந்தின் மேல்
எல்லாமே நீயெழுதிய வரலாறு
உன்னை எழுதவே என் வரலாறு
வாழ்த்தி எழுதுகிறேன்
வியர்வையே போற்றி போற்றி
எந்நாடும் வாழ
எந்நாளும் உழைக்கும்
வியர்வையே போற்றி போற்றி.