
வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தோணியில் சென்ற ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மரணமடைந்த நபர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மன்னெடுத்து வருகின்றனர்.