
பொலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படத்தின் வெளியீடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹுடா போன்றோர் நடித்துள்ளனர். ராதே திரைப்படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவருவதாக இருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.