
ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் FedEx நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். 1991ம் ஆண்டு FedEx நிறுவனத்தில் இணைந்துகொண்ட இவர் நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக நிலை பதவிகளை வகித்து வந்துள்ளார். FedEx நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 600,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
FedEx நிறுவனத்தின் நிறுவுனர் 77 வயதான ஸ்மித், வியட்நாமில் உள்ள யு.எஸ். மரைன் கார்ப்ஸில் அதிகாரியாகப் பணியாற்றி, 1973ல் அதிகாரப்பூர்வமாக ஃபெடரல் எக்ஸ்பிரஸை 389 குழு உறுப்பினர்கள் மற்றும் 14 சிறிய விமானங்களுடன் தொடங்கினார்.
தற்போது நிலைத்தன்மை, புதுமை, பொதுக் கொள்கை மற்றும் பிற உலகளாவிய பிரச்சினைகளை மேற்பார்வையிடும் செயல் தலைவர் பதவிக்கு ஸ்மித் மாறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.