
இப்போதெல்லாம்
வார்த்தைகளிலிருந்து
மௌனத்திற்கு திரும்பிக்
கொண்டிருக்கிறது மனது..
மௌன விதையில்
பெருங்காடொன்றை பிரசவித்துக்
கொண்டிருக்கின்றேன்..
மிக எளிதாகவே
வந்தமர்கிறது அதன் மீது
மௌனப் பறவை..
எந்தச் சலசலப்பாலும்
அதன் சிறகுகளை
அசைத்துப் பார்க்க முடிவதில்லை..
கவிதைக்குள் வர எத்தனிக்கும்
வார்த்தைகளைக் கூட
இப்பொழுது கண்டு
கொள்வதேயில்லை மனம்..
மௌனத்தின் விந்தையில்
சிந்தையில் பூக்கிறது
உயிரின் உயிர் பூ..
அதன்
வசீகர வாசனையை
நீங்களும் மௌனமாகவே
நுகருங்கள்…
எழுதியவர் – சங்கரி சிவகணேசன்