
உலகில் உள்ள உயிரினங்களிலே சிந்தனையாற்றல் எனும் சக்தியை உடையவன் மனிதன் மட்டுமே. இதனால் அவன் விலங்கு நிலையிலிருந்து உயர்ந்து காணப்படுகின்றான். இவ்வாறு உயர்வான நிலையிலே காணப்படும் மனித இனத்திலே முதுமைப்பருவம் என்பது முக்கியமானது. தன் அனுபவ அறிவினூடாக தன் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு ஏனையோருக்கும் வழிகாட்டியாகவிருந்து அவர்களது வாழ்க்கை நெறிகளையும் செம்மைப்படுத்துகிறான். தமிழின வரலாற்றிலே கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை என்பது அநாதியானதும்இஆழமானதும் ஆகும்.தமழினம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை பின்பற்றப்பட்டு முதியவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எந்தவொரு செயற்பாடுகளையும் முதியவர்களின் ஆலோசனைகளைப் பெற்றபின்பே செய்தனர்.தமிழின வரலாற்றில் பிள்ளைகள் பெற்றோர் என்ற கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையிலே ஒருவரையொருவர் பேணி நிற்பதென்பது தமிழின பண்பாடு கலாசாரத்தின் எதிர்பார்ப்பாக மட்டுமன்றி மரபுவழி வாழ்வாகவும் தமிழர் கொண்டிருந்தனர் .இந்தவகையிலே சிறந்த பண்பாட்டு விழுமியங்களைக்கொண்ட இனமாகத் தமிழினம் இன்றைய நிலையிலும் மதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலே முதியவர் என்பவர் யார்? அவர் முதியவராகும் வயது எது? என்ற கேள்விகளுக்கு உலகளாவிய ரீதியில் பல வரையறைகள் காணப்படுகின்றன.இவை உடல்இஉள சமூக ரீதியானவை மட்டுமன்றி வெறுமனே வயதுஇ ஆண்டு என்பவற்றின் தன்மைகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. உத்தியோகம் பார்க்கின்ற ஒருவரது ஓய்வு பெறும் வயதை முதுமையின் வயதாகத் தீர்மானிக்கின்ற போது; சுய தொழில் ஒன்றைச் செய்பவர் அல்லது ;;;;;; தொழில் எதுவுமே செய்யாத ஒருவருக்குமான முதுமை வயதாக அதனைக் கொள்ளப்படுவதை உலகளாவிய ரீதியில் காணக்கூடியதாய் உள்ளது. இந்த வகையிலே பிறேசில் உருகுவே போன்ற நாடுகளில் 40 வயதின் ஆரம்பத்தை முதியோர் வயதாகக் கொள்ளப்படுகிறது.அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட ஒரு சில நாடுகளிலே 70 வயதினை முதியோர் வயதாக கொண்டுள்ளமையையும் காணலாம்.ஆனால் ஐ.நா போன்ற பொதுஅமைப்புக்கள் உலகளாவியரீதியில் 60 வயதினை முதியோர் வயதாக 1980 ம் ஆண்டளவில் பிரகடனப்படுத்தி 1981ம் ஆண்டிலிருந்து உலக முதியோர் தினமாக ஐப்பசி 1ந் திகதியைச் சர்வதேச முதியோர் தினமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சர்வதேச உலக முதியோர் தினமாக ஒவ்வொரு வருடமும் ஐப்பசி 1 ந் திகதியை உலகம் கொண்டாடி வருகின்றது.
பொதுவாக மூப்படைதல் என்பது உலகளாவிய ரீதியில் ஒரு பருவமாறுதல் என்ற போதும் அவை தொடர்பான பிரச்சினைகள் ஒரு சமூகத்தின் கலாசாரஇபண்பாட்டுக் கோலங்கள் சார்ந்ததாகவே காணப்படுகின்றன. சமூக பண்பாட்டுச்சூழல் மரபுகள்இ பழக்கவழக்கங்கள்இ சமய சம்பிரதாயங்கள்இ சடங்குகள்இ கட்டுப்பாடுகள் என்பன எமது இலங்கை நாட்டுக்கும்இ மேலைநாட்டுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையிலே இலங்கையில் முதியவர்கள் பெற்றோர்களைப் பிள்ளைகளே தம் வீட்டில் வைத்துப் பராமரிக்கின்றனர். ஆனால் மேலைநாடுகளில் முதியோர் வயதை அடைந்த ஒருவரை அந்த நாட்டு அரசாங்கங்கள் பிள்ளைகளிடமிருந்து அவரை வேறுபடுத்தி தமது பொறுப்பிலேயே அவர்களுக்கான சகல வாழ்வதார உதவிகளையும் வழங்கிச் சிறந்த முறையில் பராமரித்து வருகின்றன. ஆனால் எமது பண்பாட்டு நிலை ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல்முற்றிலும் மாறுபட்டது.எமது மரபுவழி நியமங்கள்இ விழுமியங்கள்இ கலாசாரங்கள் பெற்றோரை மற்றும் முதியவர்களை இறுதிவரை பேணவேண்டுமென வலியுறுத்தி நிற்கின்றன.
தமிழர் தம் குடும்ப வாழ்வில் மதிப்பும் அதிகாரமும் கொண்ட பாத்திரமாக முதுமையானது இயல்பாய் இனிதாய் அமையும் வாழ்வின் எச்சங்களை இன்றும் எமது மரபுவழிக் கிராமங்களில் காண முடிகிறது.ஆயினும் இ தற்போது நிகழும் எமது சமூக மாற்றங்களின் காரணமாக எமது கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.இதனால் முதியவர்களின் நிலையும் தளரத்தொடங்கியது. நவீனமயமாக்கப்பட்ட சூழலின் அசைவுகளுக்கு முதியவர்கள் முகங்கொடுக்க வேண்டியவர்களாக தனித்து விடப்பட்டனர். மரபுவழி விழுமியங்கள் தொலைந்து போனமையால் அவர்களுக்கான பாரம்பரிய மதிப்பும் இ முதியோர் தொடர்பான உளஞ்சார் இழக்கப்பட்டன. நிலவும் புதிய சமூக அமைப்பில் பொருளாதார முனைப்பு அல்லது பொருளாதாரப்போட்டி முதியோர்க்கு எதிரானதாகவே மாற்றம் பெற்றுள்ளது . விவசாய வாழ்வில் தன்னிறைவாகக் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையில் கூட்டுமுயற்சியாக இணைந்து செயற்பட்ட நிலையானது இ நவீன தொழில்நுட்ப வரவுடன் சீரழிந்து போனது. செயற்படும் வல்லமை கொண்ட முதியவர்களையும் கட்டாய வயது வரம்பு என்பது கட்டிப்போட்டுவிட்டது. இன்று மூப்படைதல் என்பது ஓர் இயற்கையான உயிரியல் செயற்பாடு என்பதற்கப்பால் அது சமூக நடைமுறை என்ற கோட்பாட்டிற்குள் வந்து நிற்கிறது.இதனால் உழைக்கும் வல்லமை கொண்ட 60 வயதைக் கடந்த முதியோர்களும் சோம்பேறிகளாக மாற வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வயதாக வயதாக வாழும் சூழலில் கொண்ட பற்றும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து செல்ல நேரிடுகின்றது. இதனால் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ முற்படுகின்றனர்.இவர்களது பார்வையில் முதுமை என்பது நோய்இ அங்கவீனம் இ இயலாமை என்பதாகவும் இவற்றிற்கேற்ற மருத்துவ வசதிகள் தரப்பட்டால் போதும் என்பது மட்டுமன்றி இளமைக் காலத்திலிருந்த மகிழ்ச்சி இனி வரமாட்டாது என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏனையோரிடமிருந்து ஒதுங்கிக் கொள்கின்ற நிலைமையும் காணப்பிடுகிறது. ஆகவேஇ இங்கு திரு மில் கூறுகின்ற கருத்து பொருத்தமானதாக இருக்கின்றது. அதாவதுஇ “எமது வாழ்வைஇவாழ்வின் நம்பிக்கைகளை விளங்கிக்கொள்வது அல்லது விளங்கிக்கொள்வதற்கான வல்லமையினைத் தருகின்ற அறிவு” அவசியமாகிறது . ஏனெனில் முதியவர்கள் தாமாகச் சமூகத்தை விட்டு ஒதுங்க நினைப்பதும் இ அவர்களை ஒதுக்கிவிட நினைக்கின்ற ஒரு சமூக நிலைப்பாட்டிலும் முதியவர்களின் நிலை காணப்படுகின்றது.
முதியோர்களின் எதிர்கால நலன்கள் தொடர்பாக முழுமையாக அக்கறை செலுத்தும் நிலை உலக நாடுகளிடையே இன்று காணப்பட்டு வருகின்றது. உதாரணமாக கனடா என்ற தேசத்தில் முதியோர் தொடர்பான நிலைப்பாட்டில் மிக முன்னேற்றம் கண்ட நாடாகத் திகழ்கின்றது.ஆனால் இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலே அவ்வவ் குடும்பமே தமது முதியவர்களை பராமரிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையிலே கிராமம் இ பிரதேசம் இமாவட்டம்இ மாகாணம் இ தேசியம் என்ற ரீதியில் முதியோர்களுக்கான சேவை நீண்டு செல்கின்றது. இலங்கையிலுள்ள ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகளிலும் கிராம மட்ட முதியோர் சங்கங்களுக்கிடையேயும் கலை இ கலாசார விளையாட்டுப்போட்டி மற்றும் வினாடிவினாப் போட்டி போன்ற பல வகையான போட்டி நிகழ்வுகளும் இ முதியவர்களின்மனநிலையை மகிழ்வூட்டக்கூடிய சிறப்பு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. இன்று முதியோரைப் பாதுகாத்தல் என்பது உலகிலுள்ள அனைத்து மக்களதும் தலையாய கடமையாக இருக்க வேண்டுமென்பதில் உலகம் அதிக அக்கறை கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆயினும் சமகால நவீன உலகில் முதியோர் பராமரிப்பு என்பது பல நாடுகளிலே கேள்விக்குறியாக உள்ளது. அதாவதுஇ தற்காலத்தில் நிலவி வரும் சமூக பொருளாதார கலாசார மாற்றங்களின் வடிவங்களாகக் காணப்படும் கைத்தொழில்மயமாக்கல்இ நகரமயமாக்கல்இஉள்நாட்டு வெளிநாட்டு இடப்பெயர்வுகள் இ ஊழியர் சந்தையில் அதிகரித்து வரும் பெண்களின் பங்கேற்பு போன்றசெயற்பாடுகள் நாளுக்கு நாள் குடும்பக்கட்டமைப்பில் பலவித மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இவ்வாறான மாற்றங்களுக்குள் முதியோரை உள்வாங்கி அவர்களை பராமரித்தலில் இன்றைய சமூகம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றது. எது எவ்வாறிருப்பினும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலே முதியோரரது சமூகஇ பொருளாதார பாதுகாப்பிற்கான முக்கிய பங்கை அந் நாடோ அல்லது தனிப்பட்ட குடும்பமோ ஏற்க வேண்டியுள்ளது.
முதியோர் வயது என்பது 60 வயதுக்கு மேல் என உலகளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட நிலையில் முதியோர் சனத்தொகை துரித கதியில் அதிகரித்து வருவது பற்றி பல்வேறு ஆய்வாளர்களும் பலவகையான எதிர்வுகூறல்களை கூறி வருவதனைக் காணக்கூடியதாய் உள்ளது. உலகின் மொத்த சனத்தொகையில் 60 வயதிற்கும் அதற்கு மேற்பட்ட வயதினரது விகிதாசாரமானது 2000ம் ஆண்டிற்கும் 2050 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இரட்டிப்பு வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது. இவ் வளர்ச்சியானது 10 வீதத்திலிருந்து 21 வீதமாக காணப்படும் என்றும் 2002 இல் உலகில் மொத்த முதியோர் சனத்தொகையில் 52 வீதமானோர் ஆசியாவிலும் பசுபிக் பிராந்தியத்திலும் உள்ளனர் எனவும் ; இவ் விகிதத்தின் அடிப்படையில் 2025 இல் 59 வீதமாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டமையைக் காணலாம்.
இவ்வாறு உலக நாடுகளிடையே முதியோர் தொடர்பான விழிப்புணர்வு நிலை எழுச்சிபெற முதியோர் சனத்தொகையும் உலகளவில் அதிகரித்தே செல்லும் என்பது இன்று நிதர்சனமாகிக் கொண்டு வருகிறது . வளர்ச்சியடைந்த நாடுகளிடையே முதியோர்களுக்கான காப்பகம் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டு அரசுகள் அவர்களைப் பராமரித்து வருகின்றன. ஆனால் வளர்முக நாடுகளிடையே அவ்வாறான அரச காப்பகங்கள் இல்லையாயினும் முதியோர் தொடர்பான அக்கறையும் இ அவர்களின் பர்துகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் என்றுமில்லாத அளவிற்கு துரிதம் பெற்றுள்ளன. இன்று முதியோர் பிரச்சினை என்பது ஒரு குடும்பத்தின் பிரச்சினைகளே அன்றி சமூகப்பிரச்சினையோ என்ற நிலைமாறி அது ஒரு சர்வதேசப் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் இனத்தைப் பொறுத்தவரை காலங்காலமாகக் கடைக்கப்பிடிக்கப்பட்டு வந்த தாய்இ தந்தைஇ பிள்ளைகள்இ பேரன்இ பேர்த்தி என்ற தொடரான குடும்ப உறவுகளின் சங்கமமானது தற்கால சூழ்நிலையில் விரிவடைந்து செல்வதைக் காணலாம். போர்ச்சூழல் இ இடப்பெயர்வு போன்ற காரணிகளே ஆரம்ப காரணிகளாக இருந்தாலும் எமது தமிழ் பண்பாட்டை நாங்கள் இழந்து வருகிறோம் என்பது பொருத்தமானதா? ஏவ்வகையான இடர்பாடுகள் ஏற்பட்ட போதும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையினின்றும் வழுவாமல் வாழ்ந்த தமிழினம் தன் இருப்பை இழந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது . இன்று உலகம் பூராகவும் முதியோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல் ;விடுக்கப்பட்டு முதியோர்கள் பாதுகாப்பாகவும் அவர்களுக்கான சகல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்ற ரீதியில் அமைந்த இன்றைய உலக இயக்;கமானது தமிழ் இனத்தின் பாரம்பரிய கலாசார விழுமியங்களே என்பதில் தமிழினம் பெருமையடைய முடியும். ஆனால் அதே தமிழினத்தில் இன்று நடப்பது என்ன? பெற்றோர்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள். முதியோர் இல்லங்களிலே விடப்படுகிறார்கள். பிள்ளைகள் வெளிநாட்டிலே உல்லாசமாக வாழ பெற்றோர் இ பேரன் இ பேர்த்தியர் என்போர் அநாதைப் பிணங்காக ஊரார் ஒன்றிணைந்து எரிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு பலவாறாக தமிழினத்தின் பண்பாட்டுக்கோலங்கள் சிதைவடைந்து செல்வதை நாகரிகத்தின் வளர்ச்சி என்று மேலோட்டமாகக் கூறி விட முடியாது.
மிகப்பழைய காலத்திலிருந்து இன்று வரை தமிழ் பண்பாடு கலாசாரம் காத்து நின்ற எமது முதியோர்கள் இன்று தெரு நாய்களுக்கு சமமாக உலாவருவது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்குமே வெட்கம்.ஆகவே நம் முந்தைத் தமிழரின் முதன்மைக் குறிக்கோளாக விளங்கிய “ யாதும் ஊரே யாவருங் கேளீர்” என்பது போன்ற பொன்மொழிகளுக்கு உயிர்கொடுத்து முதியவர்களைக் காத்து முதன்மையடைவோம்.
;