
முச்சக்கரவண்டி திருடுபோன சம்பவத்தில் சந்தேக நபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 4,20,000 மதிப்பிலான முச்சக்கர வாகனம் ஒன்றி கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் அனைவரும் கொழும்பு பிரேதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான மூவரும் 29,30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.