
இலங்கையின் தலைநகரின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் விருந்தாளிகள் சுற்றிவளைக்கப்பட்டு 34 இளைஞர் யுவதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை சோதனைக்குட்படுத்தும் போது 16 பேரிடம் கஞ்சா பக்கட்களும், 12 ஐஸ் போதை பொருள் மற்றும் ஆபத்தான போதை பொட்களும் பொலிஸாரால் கைப்பட்டப்பட்டுள்ளன.
இளைஞர், யுவதிகள் குறித்த போதைப் பொருட்களை அருந்தியுள்ளார்களா என சோதனையிட களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விருந்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களுக்குள் விடுதி உரிமையாளரான பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.