
ஆயிரக்கணக்கான மியன்மார் மக்கள் அங்கு தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற வன்முறை காரணமாக தாய்லாந்திற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய தரவுகள் படி 2 ஆயிரத்து 267 பேர் தாய்லாந்திற்குள் நுழைய முற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான கிராம வாசிகள் சல்வீன் (Salween) நதி பக்கத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், கரேன் தேசிய ஒன்றியத்தின் படைகளுக்கும் மியன்மார் இராணுவத்தினருக்கும் இடையில் சண்டை அதிகரித்தால் அவர்கள் தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதாகவும், கரேன் அமைதி ஆதரவு வலையமைப்பு The Karen Peace Support Network தெரிவித்துள்ளது.