தூரத்து முதல் துளி
மண்ணுடன் உறவாட
காற்றில் பரவும் மண் வாசத்திற்கு
ஈடான மலர் வாசனை உண்டோ
சொல்லுங்கள் .
நதியின் இசைக்கும்
அருவியின் இசைக்கும்
நிகரான மழையின் இசை
வீடு தேடி வந்து
இலவசமாக ஜன்னலில் பாடுவதை
ரசிக்காமல் இருக்க முடியுமா
சொல்லுங்கள்
உடையை நனைக்கும்
உடலை நனைக்கும்
என்று ஒதுங்காமல்
உயிரை நனைக்கும்
மழையை நனையாமல்
கடக்க முடியுமா
சொல்லுங்கள் .
மழை ஒரு நிகழ்வு அல்ல
மழை ஒரு செய்தி அல்ல
வானமும் பூமியும்
குதூகலிக்கும் வேளையில்
நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா
சொல்லுங்கள் .

தமிழ்செல்வன்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal