
மரம்
நிழலைத் தந்தது – அந்த
நிழல் ஆரோக்கியம் தந்தது.
மரம்.
காற்றை எமக்கு தந்தது. அந்த
காற்று சுவாசத்தை தந்தது.
மரம்.
கனிகளையும் தந்தது- அந்த
கனிகள் உடலுக்கு சக்தி தந்தது.
மரம்.
காடுகளை தந்தது – அந்த
காடுகள் பசுமையினை தந்தது.
மரம்.
தனது உடலையும் தந்தது- அந்த
உடல்கள் எமக்கு கதவுகளை தந்தது
கதவுகள் பாதுகாப்பை தந்தது.
மரம்.
பறவைகளுக்கு வீடாக மாறியது
பறவைகள் எமக்கு மகிழ்ச்சி தந்தது.
மரம்.
விறகுகளையும் தந்தது- அந்த
விறகுகள் நெருப்பை தந்தது .
மரம்.
இறந்து சருகுகளை தந்தது – அந்த
சருகுகள் மண்ணை வளமாக்கியது.
மரம்.
பிறந்த போது எமக்கு தொட்டியில்- மரம்
இறந்த போது எரிக்க கொல்லி.
மரம்.
மனிதனுக்கு இரண்டாம் உயிர்
மரத்தை வளர்ப்போம் – எமது.
உயிரை காப்போம்
நன்றியுடன்,
உங்கள் ஐனி,
கிண்ணியா.