
மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் ஒன்று பனைமரத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றையவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிகமான விசாரணைகளை மன்னார் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.