வேப்ப மரத்தில் இருந்து பால் வடியும் அதிசய சம்பவம் ஒன்று மட்டக்களப்பின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மகிழூர்முனை கிராமசேவையாளர் பிரிவில் பிராமணர் ஒழுங்கையில் வயல் ஓரமாக அமைந்துள்ள வேம்ப மரத்திலிருந்தே இவ்வாறு பால் வடிந்து கொண்டிருக்கின்றது.
இத்தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து அதனைப் பார்வையிட்டு மரத்திற்கு பட்டு கட்டி வழிபடு செய்வதாகவும் கூறப்படுகின்றது. மேலும் குறித்த வேப்பமரத்தின் அருகே பாத்திரம் ஒன்றை வைத்து காணிக்கை செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது
இந்நிலையில் அந்த அதிசய வேப்பமரத்தைக்காண மக்கள் குவிந்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


