
மியன்மாரில் இடம்பெற்றுவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில் மியன்மாரில் அமைதியின்மை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு ஆங் சான் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய இராணுவத்தினரின் அத்துமீறிய செயற்பாடுகளால் கொதித்ததெழுந்த மக்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்யுமாறு கோரி நாளுக்குநாள் திவிரமான போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மக்களின் போராட்டத்தை அடக்க இராணுவமும் அடக்குமுறையை தீவிரப்படுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்து வருகிறது. இதுவரை 134 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது.